2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 35° 🌧️ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

உயர்தரப் பரீட்சை விண்ணப்பம் கோரல் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

உள்ளூர்April 24, 2026 · 6 months முன்6
உயர்தரப் பரீட்சை விண்ணப்பம் கோரல் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதேநேரம் உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரலுக்கான காலப்பகுதியானது எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

எனவே இதுவரை 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்பிக்காத பரீட்சார்த்திகள் உடனடியாக அதனை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.