2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

அரச விடுமுறையில் மாற்றம்!

உள்ளூர்April 24, 2026 · 4 months முன்0

2026 ஆம் ஆண்டுக்கான அரச விசாக பூரணை தினத்தை முன்னிட்டு மே மாதம் 31 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அரச விசாக பூரணை உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்னதாக மே மாதம் 2 ஆம் திகதி வழங்கப்படவிருந்த விடுமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய, இந்த முறை விசாக பூரணை வாரம் மே மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.