2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

எரிபொருள் சேமிக்க வாகன எண்ணிக்கை குறைப்பு – அதிரடி உத்தரவு

உள்ளூர்March 24, 2026 · 5 months முன்2

எரிபொருளை சிக்கனப்படுத்துவதற்காக அமைச்சர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவையாளர்களின் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சுற்று நிரூபத்தை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் அரச வாகனங்களைப் பயன்படுத்தும் போது எரிபொருளை எவ்வாறு சேமிப்பது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளன.அதன்படி, அரச சேவையில், தற்போது 92,000 வாகனங்கள் இயங்கும் நிலையில் இருக்கின்றன.

அந்த வாகனங்கள் ஒவ்வொன்றும் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் ஒரு லீற்றர் எரிபொருளைச் சேமித்தால், நாளொன்றுக்கு 92,000 லீற்றர் எரிபொருளைச் சேமிக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.