2026 October 22, Thursday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

போதுமான எரிபொருள் உள்ளது : அமைச்சர் நளிந்த

உள்ளூர்March 24, 2026 · 7 months முன்9
போதுமான எரிபொருள் உள்ளது : அமைச்சர் நளிந்த

நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட இறக்குமதிகளின் அடிப்படையில், மே மாதம் வரை தடையின்றி எரிபொருளை வழங்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது சுமார் 134,000 மெட்ரிக் தொன் டீசல் கையிருப்பில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் முற்பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் மூலம் மேலும் 124,000 மெட்ரிக் தொன் கிடைக்கவுள்ளது. இதன்படி, மே மாதம் இரண்டாம் வாரம் வரை போதுமான டீசல் கையிருப்பு உள்ளது.

தற்போது கையிருப்பிலும் வரவுள்ள கப்பல்களிலும் சேர்த்து 151,450 மெட்ரிக் தொன் 92 ரக பெட்ரோல் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் மேலதிகமாக 55,300 மெட்ரிக் தொன் வரவுள்ளது. இதன் மூலம் மே மாதம் மூன்றாவது வாரம் வரை பெட்ரோல் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

சுப்பர் டீசல் மற்றும் பெட்ரோல் 95 ஆகியவையும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.