2026 October 11, Sunday ⛅ கொழும்பு 26° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இத்தாலியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!

விளையாட்டுFebruary 19, 2026 · 8 months முன்1
இத்தாலியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 37-வது லீக் போட்டியில், இத்தாலி அணியை 42 ஓட்டங்களால் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப் பெற்றுள்ளது.

இந்தியாவின் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று (19) காலை 11.00 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணித் தலைவர் ஹாரி மனென்டி முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைக் குவித்தது.

அணியின் துடுப்பாட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் 46 பந்துகளில் 75 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார்.

இறுதி ஓவர்களில் களமிறங்கிய ஷெர்பேன் ரூதர்போர்ட் மற்றும் மேத்யூ போர்ட் ஆகியோர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

இத்தாலி அணி சார்பில் சிறப்பாகப் பந்துவீசிய கிரிஷன் களுகமகே தனது 4 ஓவர்களில் 25 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்

அதன்படி, 166 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி 18 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களை பெற்று தோல்வியைடைந்தது.

இத்தாலி அணி சார்பில் பென் மனென்டி அதிகபட்சமாக 26 ஓட்டங்களைப் பெற்றுக் ொண்டார்.

பந்து வீச்சில், மேத்யூ ஃபோர்டு 3 விக்கெட்டுக்களையும் மற்றும் ஷமர் ஜோசப் தலா 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.