2026 October 19, Monday ⛅ கொழும்பு 30° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

விளையாட்டுFebruary 16, 2026 · 8 months முன்1
ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

2026 டி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ளது.

டெல்லியில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரகம் நிர்ணயிக்கப்பட்ட அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி சார்பில் சோஹைப் கான் 68 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அஸ்மதுல்லா உமர்சாய் 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

இதன்படி, 161 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் இப்ராஹிம் சத்ரான் அதிகபட்சமாக 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதேபோல், அஸ்மதுல்லா உமர்சாய் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அஸ்மதுல்லா உமர்சாயின் பந்துவீச்சு (4 விக்கெட்டுகள்) மற்றும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அவர் பெற்ற 40 ஓட்டங்கள் இப்போட்டியின் திருப்புமுனையாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.