2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 25° ⛈️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஐசிசி ஒருநாள் தரவரிசை : இலங்கை அணிக்கு பின்னடைவு

விளையாட்டுJanuary 28, 2026 · 9 months முன்5
ஐசிசி ஒருநாள் தரவரிசை :  இலங்கை அணிக்கு பின்னடைவு

சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை அணி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 6 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 

கொழும்பில் நேற்று நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இழந்ததன் காரணமாகவே, 5ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி 6ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், இங்கிலாந்து அணி தொடர்ந்தும் 8ஆவது இடத்திலேயே நீடிக்கிறது. 7 ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி தரப்படுத்தப்பட்டுள்ளது. 

நேற்று இங்கிலாந்து பெற்ற இந்தத் தொடர் வெற்றியானது, 2023 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அந்த நாடு தனது சொந்த மண்ணுக்கு வெளியே பெற்ற முதலாவது ஒருநாள் தொடர் வெற்றியாகக் கருதப்படுகிறது. 

இந்தத் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் நியூசிலாந்தும், மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ள அதேவேளை, பாகிஸ்தான் அணி 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.