2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

உள்ளூர்December 29, 2025 · 8 months முன்0

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (29) முற்பகல் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் அப்பகுதியில் கடமையிலீடுபட்டிருந்த வேளையில் இவ்வாறு சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய சுப்பிரமணியம் நேசதுரை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில நீதிமன்ற உத்தரவைப் பெற்று மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.