2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கோஹ்லி – ரோஹித் அசத்தல் : அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா.

விளையாட்டுOctober 26, 2025 · 10 months முன்0
கோஹ்லி – ரோஹித் அசத்தல் : அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா.

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், சிட்னியில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் விராட் கோலி – ரோஹித் சர்மா இருவரும் பிரிக்கப்படாத இணைப்பாட்டத்தை வழங்கி தங்களது நட்சத்திர துடுப்பாட்டத்தை நிகழ்த்தினர்.

போட்டியின் ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.

அவுஸ்திரேலியா அணி 236/10 (46.4 ஓவர்கள் நிறைவில் பெற்றது)

அவுஸ்திரேலியா அணி துடுப்பாட்டம் – மற் றென்ஷோ 56 (58), மிற்செல் மாஷ் 41 (50), மத்தியூ ஷோர்ட் 30 (41), ட்ரெவிஸ் ஹெட் 29 (25) ஓட்டங்கள்.
இந்திய அணி பந்துவீச்சு – ஹர்ஷித் ரானா 4/39, வொஷிங்டன் சுந்தர் 2/44, அக்ஸர் பட்டேல் 1/18, மொஹமட் சிராஜ் 1/24, குல்தீப் யாதவ் 1/50)

பதிலுக்கு 237 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 38.3 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இந்திய அணி துடுப்பாட்டம் – ரோஹித் சர்மா ஆ.இ 121 (125), விராட் கோலி ஆ.இ 74 (81) ஓட்டங்கள்.

போட்டியின் நாயகன் – ரோஹித் சர்மா.

தொடரின் நாயகன் – ரோஹித் சர்மா.