2026 October 23, Friday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இந்தியா – பாகிஸ்தான்

விளையாட்டுSeptember 28, 2025 · 1 year முன்3
ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இந்தியா – பாகிஸ்தான்

2025 ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன. 

 

இரண்டு அணிகளுக்கும் இடையேயான மோதலானது அதிக எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.

 

1984 முதல் நடைபெற்றுவரும் ஆசியக் கிண்ண வரலாற்றில் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டதே இல்லை. 

 

ஆனால் 1986 ஆஸ்ட்ரல்-ஆசிய கிண்ண மோதலின் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. அதில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

 

அதேபோல 1994 ஆஸ்ட்ரல்-ஆசிய கிண்ண இறுதிப்போட்டியிலும் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது பாகிஸ்தான்.

 

கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட 2017 சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 

 

இந்திய அணியை பொறுத்தவரை 1985 உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியை பதிவுசெய்தது. 

 

அதுபோல 2007 டி20 உலகக் கிண்ணம் இறுதிப்போட்டியில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

 

1985 முதலான 40 வருட கிரிக்கெட் வரலாற்றில் 5 முறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதியுள்ள நிலையில், அதில் பாகிஸ்தான் அணி 3-2 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.