2026 October 25, Sunday ⛈️ கொழும்பு 26° ⛈️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஆப்கானை வீழ்த்தியது இலங்கை – சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி.

விளையாட்டுSeptember 19, 2025 · 1 year முன்2
ஆப்கானை வீழ்த்தியது இலங்கை – சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி.

ஆசிய கிண்ண இருபதுக்கு T20 போட்டியில், அபுதாபியில் நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

> முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில்,

– Mohammad Nabi அதிரடியாக துடுப்பாடி இறுதி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடங்களாக 60 ஓட்டங்களையும்,

– அணியின் தலைவர் Rashid Khan மற்றும் Ibrahim Zadran தலா 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

> பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில்,

– Nuwan Thushara 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

170 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி’ 18.4 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்துள்ளது.

> இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில்,

– Kusal Mendis ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும்,

– Kusal Perera 28 ஓட்டங்களையும், Kamindu Mendis ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதற்கமைய ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் குழு B யிலிருந்து இலங்கை அணியும், பங்களாதேஷ் அணியும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.