2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஓமன் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி.

விளையாட்டுSeptember 13, 2025 · 11 months முன்0
ஓமன் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி.

2025 ஆசிய கோப்பை 4வது போட்டியாக நேற்று 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் – ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டை தெரிவு செய்யத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்தது.

– பாகிஸ்தான் அணி சார்பில், முகமது ஹாரிஸ் 43 பந்துகளில் 66 ஓட்டங்கள், சாஹிப்சாதா ஃபர்ஹான் 29 , ஃபக்கர் ஜமான் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்கள் ஹசன் நவாஸ் 09 ஓட்டங்களை பெற்றனர்.

– ஓமன் அணி பந்து வீச்சில், ஷா பைசல் மற்றும் ஆமிர் கலீம் தலா 03 விக்கெட்டுகளையும், முகமது நதீம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

161 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஓமன் அணி 16.4 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

– ஓமான் அணி சார்பில், ஆமிர் கலீம் 13 ஓட்டங்கள், , ஹம்மத் மிர்சா 27 ஓட்டங்களை மாத்திரமே அதிக பட்சமாக எடுத்தார்கள்.

– பாகிஸ்தான் அணி பந்துவீச்சில், சைம் அயூப், சுஃபியான் முகீம், ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.