2026 October 24, Saturday 🌧️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஆசிய கிண்ணம் – முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி.

விளையாட்டுSeptember 10, 2025 · 1 year முன்6
ஆசிய கிண்ணம் – முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி.

ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 94 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.

– துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில்,

Sediqullah Atal ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றதுடன், Azmatullah Omarzai 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

– பந்து வீச்சில் ஹொங்கொங் அணி சார்பில் Ayush Shukla, Kinchit Shah தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 189 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணி 20 ஓவர் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 94 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

– துடுப்பாட்டத்தில் ஹொங்கொங் அணி சார்பில் Babar Hayat 39 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

– ஆப்கானிஸ்தான் பந்து வீச்சில் Fazalhaq Farooqi, Gulbadin Naib தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.