2026 September 18, Friday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
ஜப்பானின் நீண்டகால குறைந்த வட்டி கொள்கைக்கு மேலும் பின்னடைவு!விளக்கமறியல் நீட்டிப்பு – நாமலுக்கு அடுத்த தீர்ப்பு 29ஆம் திகதி!ஆசிய விளையாட்டில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!“பொருளாதாரம் ஸ்திரத்தன்மை பாதையில்” – ஜனாதிபதி அநுரநாமல் மீது நிலுவையிலுள்ள ஊழல் வழக்கு விசாரணை!ரயில் போராட்டம் நீடிப்பு – சேவைகள் பாதிக்குமா?சட்டவிரோத வருமானம் சந்தேகம் – ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்!முல்லைத்தீவு, பொலன்னறுவையில் பிற்பகல் மழை சாத்தியம்!

ஆசிய விளையாட்டில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

விளையாட்டுSeptember 18, 2026 · 3 hours முன்6
ஆசிய விளையாட்டில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. 

இன்று (18) இடம்பெற்ற மூன்றாவது காலிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் மலேசிய அணிகள் மோதியிருந்தன. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. 

இந்நிலையில் 161 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மலேசிய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 86 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. 

குறித்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.