2026 October 10, Saturday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

LPL சாம்பியன் யார்? இன்று இரவு தீர்ப்பு!

விளையாட்டுAugust 8, 2026 · 2 months முன்8
LPL சாம்பியன் யார்? இன்று இரவு தீர்ப்பு!

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) மற்றும் ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) இரவு நடைபெறவுள்ளது.

 லீக் சுற்றின் அனைத்துப் போட்டிகளின் முடிவிலும் இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலின் முதல் (ஜஃப்னா) மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்திருந்தன.

 இதற்கமைய, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது தகுதிப் போட்டியில் (Qualifier 1) திரில் வெற்றி பெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.

 இருப்பினும், வெளியேற்றப் போட்டியில் வெற்றி பெற்று வந்த கொழும்பு கெப்ஸ் அணியை இரண்டாவது தகுதிப் போட்டியில் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி, மீண்டும் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.

 இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.