2026 October 11, Sunday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

“போதைப்பொருள் ஒழிப்பில் பொலிஸாரின் பெரிய வெற்றி”

உள்ளூர்May 15, 2026 · 5 months முன்13
“போதைப்பொருள் ஒழிப்பில் பொலிஸாரின் பெரிய வெற்றி”

முழு நாடுமே ஒன்றாக தேசிய விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 176,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் திகதி முதல் நேற்று (14) வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 176,269 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன்போது 1941 கிலோ 248 கிராம் ஹெரோயின், 2003 கிலோ 512 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 436 கிலோ 235 கிராம் குஷ் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டவர்களில் 325 சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 2820 சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேபோல், 2050 சந்தேகநபர்கள் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.