2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

“கட்டுநாயக்கில் கோடிகள் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்”

உள்ளூர்May 15, 2026 · 3 months முன்1
“கட்டுநாயக்கில் கோடிகள் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்”


108 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள ‘கொக்கெய்ன்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட வௌிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் இன்று (15) முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவர் இந்த போதைப்பொருளை ‘பசுமை வழி’ ஊடாக வெளியே கொண்டு செல்ல முற்பட்ட போது போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைதாகியுள்ளார். 

சந்தேகநபர் 60 வயதுடைய இந்திய பிரஜை என்பதுடன் அவர் ஒரு புவியியலாளர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அவர் இந்த போதைப்பொருளுடன் உகண்டாவின் கம்பாலா நகரிலிருந்து, கட்டாரின் தோஹாவை அடைந்துள்ளார். 

அங்கிருந்து கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR 664 என்ற விமானம் மூலம் இன்று (15) காலை 10.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். 

அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் இருந்த இரண்டு சான்றிதழ் ஆவணங்களும், மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 150 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, குறித்த விமானப் பயணியும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருளும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.