2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 34° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் புதிய திருப்பம்!

விளையாட்டுApril 26, 2026 · 6 months முன்5
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் புதிய திருப்பம்!

இலங்கையில் தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தில் அடுத்த வாரத்திற்குள் தீர்க்கமான மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தேவைப்பட்டால், தற்போதைய நிர்வாகக் குழு பதவியிலிருந்து விலகி, இடைக்காலக் குழுவொன்றுக்கு இடமளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகின்றது.

இவ்வாறான சூழலில், 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகம் அமையும் வரை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) நிதியுதவிகள் நிறுத்தப்படலாம் என அஞ்சப்படுகின்றது.