2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 652 சந்தேகநபர்கள் கைது

உள்ளூர்January 21, 2026 · 7 months முன்0

நேற்று நாடு முழுவதும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது 652 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸாரால் மொத்தம் 30,214 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவற்றில், குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 24 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 264 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 161 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து விதி மீறல்களில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 397 சாரதிகள் கைது செய்யப்பட்டனர்.

கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 52 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,777 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.