2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்

விகாரை சொத்துக்களில் கைவைக்க வேண்டாம் என ரணில் எச்சரிக்கை

உள்ளூர்January 21, 2026 · 7 months முன்0

நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த பின்னணியில், தற்போதைய ஆட்சியாளர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

காலி பிரதேசத்தில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். 

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய விகாரைகளுக்குச் சொந்தமானவை விகாரைகளுக்கும், தேவாலயங்களுக்குச் சொந்தமானவை தேவாலயங்களுக்கும் உரியனவாகும். நாம் வழங்கும் தங்க நகைகள் அனைத்தும் விகாரைகளுக்கோ அல்லது தேவாலயங்களுக்கோ சொந்தமானவை. அவற்றில் கைவைக்கச் சென்று நாட்டுக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது.

1815 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றிருந்தார்.

இதை ஏற்றுக்கொண்டு மகா சங்கத்தினருடன் இணைந்து இதனைப் பாதுகாப்பது அனைத்துக் கட்சிகளினதும் கடமையாகும், என்றும் அவர் குறிப்பிட்டார்.