பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எப்போது? ஆர்வத்துடன் பிமல்

பிரதமருக்கு எதிரான எதிர்க்கட்சி கையொப்பமிட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் பிமல் ரத்னாயக்க இன்று சபை நடவடிக்கையின் போது எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்தார்.
இதேவேளை பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை மீதான விவாதத்தை எதிர்வரும் 22 மற்றும் 23 திகதிகளில் நடத்துவதற்கு ஆளும்கட்சி தயார் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதற்கு எதிர்க்கட்சி தயாராக இல்லையெனின் கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்றை எதிர்வரும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களில் நடத்துவதற்கு முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்