2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

கொத்மலை அணை திறந்ததால் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

உள்ளூர்August 5, 2026 · 1 week முன்0

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் சேறு போக்கும் மதகுகளும் இன்று (05) காலை திறக்கப்பட்டன.

 இதன்படி, அதிகப்படியான நீர் வினாடிக்கு 130 கன மீற்றர் வேகத்தில் கொத்மலை ஓயாவிற்கு திறந்து விடப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபையின் பொறுப்புப் பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.

 வான் கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொத்மலை அணையின் கீழ் பகுதியில் உள்ள நுகவேல, ரிவர்சைட், மாவதுர ஆகிய பிரதேசங்களிலும், மகாவலி கங்கையின் உலப்பனே பகுதி முதல் கம்பளை, வெலிகல்ல, கெலியோயா, பேராதனை, கட்டுகஸ்தோட்டை மற்றும் பொல்கொல்ல வரையிலான தாழ்நிலப் பகுதிகளிலும் வெள்ள அபாயம் காணப்படுவதாக இலங்கை மகாவலி அதிகார சபை எச்சரித்துள்ளது.

 எனவே, இது குறித்து அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட்டு, உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மகாவலி அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

 மேலும், நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவிலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.