2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

விளக்கமறியலில் உள்ள பலங்கொட காசியப்ப தேரர் வைத்தியசாலையில் …

உள்ளூர்January 24, 2026 · 7 months முன்1

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட காசியப்ப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மருத்துவப் பரிசோதனைக்காக பலங்கொட காசியப்ப தேரர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். 

அண்மையில் திருகோணமலை சம்புத்த ஜயந்தி விகாரையில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில், பலங்கொட காசியப்ப தேரர் உட்பட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 06 சந்தேகநபர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 

அதற்கமைய, பலங்கொட காசியப்ப தேரருக்கு ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக, இரத்தப் பரிசோதனை ஒன்றை மேற்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.