2026 October 11, Sunday ⛅ கொழும்பு 26° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

CID-யில் 4 மணி நேர வாக்குமூலத்திற்குப் பிறகு வெளியேறிய வருண ஜயசுந்தர!

உள்ளூர்July 2, 2026 · 3 months முன்4
CID-யில் 4 மணி நேர வாக்குமூலத்திற்குப் பிறகு வெளியேறிய வருண ஜயசுந்தர!

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (02) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். 

அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே இவ்வாறு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் உறுப்பினராக சந்தேகிக்கப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடன் பேணியதாகக் கூறப்படும் சில தொடர்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்வதற்காகவே வருண ஜயசுந்தர இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.