2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

பல்கலைக்கழகங்களில் அணுகல் வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்!

உள்ளூர்July 12, 2026 · 1 month முன்1

நாட்டின் கல்வி செயல்பாட்டில் பன்முகத்தன்மையை அங்கீகரிக்க வேண்டும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘சரசவி திரியோ அபிமன்’ விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப விழா, நேற்று (11) அலரி மாளிகையில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வீதம் புலமைப்பரிசில் தொகையும் வழங்கி வைக்கப்பட்டது. 

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர், எந்தவொரு பிள்ளையும் கல்வி முறையிலிருந்து விடுபடாமல், விசேட தேவையுடைய அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வியில் சம வாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கை என வலியுறுத்தினார். 

மேலும், பல்கலைக்கழகங்களுக்குள் இம்மாணவர்களுக்குத் தேவையான நடைமுறை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டிய விசேட பொறுப்பு, துணைவேந்தர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளுக்கு உண்டு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.