2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

“AI” மூலம் குற்றங்களை முன்கூட்டியே தடுக்க இங்கிலாந்து அரசின் புதிய முன்னெடுப்பு.

தொழில்நுட்பம்August 25, 2025 · 12 months முன்2
“AI” மூலம் குற்றங்களை முன்கூட்டியே தடுக்க இங்கிலாந்து அரசின் புதிய முன்னெடுப்பு.

“வெள்ளம் வரும் முன் அணைக்கட்டு’ என்பது போல AI மூலம் குற்றங்கள் நடப்பதட்கு முன்பே தடுக்க இங்கிலாந்து அரசு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து அரசு தற்போது செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) மூலம் குற்றங்களை முன்னதாகவே கணித்து தடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சம், `குற்ற வரைபடம் (crime map)’ என்ற முறையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எந்த நேரத்தில், எங்கு குற்றம் நடைபெற வாய்ப்புள்ளது என்பதைக் கணிப்பதாகும்.

இந்த AI அமைப்பு, காவல்துறை, சமூக நலத்துறை தரவுகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்யும்.

குறிப்பாக கத்திக்குத்து சம்பவங்கள், கொள்ளை, வன்முறை தாக்குதல்கள், சமூக விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்னதாகவே கணித்து போலீஸாருக்கு எச்சரிக்கை அனுப்புவதே இதன் நோக்கம்.

இந்த AI அமைப்பு, காவல்துறை, சமூக நலத்துறை தரவுகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்யும்.

குறிப்பாக கத்திக்குத்து சம்பவங்கள், கொள்ளை, வன்முறை தாக்குதல்கள், சமூக விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்னதாகவே கணித்து போலீஸாருக்கு எச்சரிக்கை அனுப்புவதே இதன் நோக்கம்.

இத்திட்டத்தின் முதற்கட்ட முதலீடாக சுமார் 4 மில்லியன் பவுண்டுகள் அரசால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த முதலீட்டின் அடிப்படையில் 2026 ஏப்ரல் மாதத்திற்குள் ஒரு செயல் மாதிரி தயாராகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், முழுமையான செயல்பாட்டை 2030க்குள் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 500 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.

இந்த முயற்சியின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது பழைய குற்றப் பதிவுகளை மட்டும் காட்டும் வரைபடம் அல்ல மாறாக, முன்கூட்டியே கணித்து செயல்பட உதவும் என்பதால், காவல்துறைக்கு குற்றங்களைத் தடுக்கும் திறன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், இங்கிலாந்தின் இந்தப் புதிய AI குற்ற வரைபடம் திட்டம் காவல்துறை பணியில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.