2026 September 12, Saturday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 32° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 33°
LIVE
உயிரியல் அச்சுறுத்தலை தடுத்த செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு அமைப்பு!“போர் பதற்றத்திலும் எண்ணெய் விலை திடீர் சரிவு!”2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மொரோக்கோவிலா? FIFA மறுப்பு!உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டயானாவின் கருப்பு ஆடை ஏலத்தில்!பொலன்னறுவையில் அநுர தலைமையில் விவசாயிகள் பேரணி!அநுர அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!எல் நினோ தீவிரம் – ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு!கனமழை, இடி, மின்னல் – எச்சரிக்கையாக இருங்கள்!

உயிரியல் அச்சுறுத்தலை தடுத்த செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு அமைப்பு!

தொழில்நுட்பம்September 12, 2026 · 38 seconds முன்0
உயிரியல் அச்சுறுத்தலை தடுத்த செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு அமைப்பு!

உயிரியல் ஆயுதங்களை உருவாக்கும் நோக்கில் சில விஞ்ஞானிகள் தங்களது செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களைப் பயன்படுத்தி மேற்கொண்ட ஆராய்ச்சிகளைத் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்திவிட்டதாக ANTHROPIC நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது உலகளாவிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒழுங்குமுறை துறையில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளதுடன், உயிரியல் பாதுகாப்பு மீதான அச்சுறுத்தல்களைத் தடுத்தல் தொடர்பிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ANTHROPIC நிறுவனத்தின் Claude AI மூலம் சிக்குன்குனியா வைரஸின் வீரியத்தை இன்னும் அதிகரிக்கும் ‘Gain-of-function’ உட்பட பல ஆபத்தான மற்றும் தீய ஆராய்ச்சிகள் கண்டறிந்து தடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொழில்நுட்பம் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, மேற்கண்ட தீய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர்களின் கணக்குகள் உடனடியாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள இந்த அறிக்கை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சமூகத்தினரிடையே பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.