2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

இரு வாகனங்கள் மோதியாதல் பயங்கர விபத்து

உள்ளூர்March 28, 2026 · 5 months முன்1

மஹியங்கனை – கிராந்துருகோட்டே வீதியின் நேற்று இரவு 3ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

கிராந்துருகோட்டே நோக்கி பயணித்த கெப் ரக வாகனமொன்று, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த உழவு இயந்திரத்துடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் காயமடைந்த உழவு இயந்திரத்தின் சாரதி, கெப் வாகன சாரதி மற்றும் அதில் பயணித்த 7 பேர் உட்பட மொத்தம் 9 பேர் சிகிச்சைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்தவர்கள் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 57 மற்றும் 44 வயதுடைய தம்பதியினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.