ரீ – ரிலீஸ் செய்யப்படும் தளபதியின் எவர்கிரீன் ஹிட் “குஷி”

2000 ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வெளியாகி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய தளபதி விஜயின் முக்கிய ஹிட் திரைப்படம் “குஷி”
தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான “குஷி” திரைப்படம் ரீ – ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா, விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தேனிசை தென்றல் தேவாவின் இசையில் படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி கட்டிப்புடிடா, மேக்கவீனா, ஒரு பொண்ணு ஒண்ணு, மேகம் கருக்குது உட்பட ஆறு பாடல்களும் சூப்பர் ஹிட்.
இந்நிலையில் “குஷி” திரைப்படம் எதிர்வரும் வரும் 25 ஆம் திகதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.




