2026 September 6, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்க முயற்சி – ரணில் குற்றச்சாட்டு!பயணத் தடை விதிக்கும் முன்பே வெளிநாடு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்!மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!

46 வருடங்களுக்கு பின் இணையும் சூப்பர்ஸ்டார் – உலகநாயகன்.

பல்சுவைAugust 20, 2025 · 1 year முன்2
46 வருடங்களுக்கு பின் இணையும் சூப்பர்ஸ்டார் – உலகநாயகன்.

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் “கூலி”. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இந்நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகி உலக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கின்றனர். அப்படத்தை கமலின் RKFL இண்டெர்னேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும். படத்தின் கதை இருவருக்கும் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. என சமூக ஊடகங்களிடையே தகவல் பரவி வருகின்றது.

இப்படம் மட்டும் படமாக்கப்பட்டால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கே கொண்டாட்டம் தான் என தெரிவிக்கப்பட்டு வருகின்றது.