2026 October 27, Tuesday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

துப்பாக்கி 2வது பாகம்.. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உடைத்த ரகசியம்

பல்சுவைAugust 20, 2025 · 1 year முன்3
துப்பாக்கி 2வது பாகம்.. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உடைத்த ரகசியம்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2012ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்  துப்பாக்கி. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார்.

காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க வித்யுத் ஜாம்வல் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் விஜய்யின் கரியரில் முதல் முறையாக ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படம் ஆகும்.

தற்போது, ஏ.ஆர். முருகதாஸ் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படங்களில் எந்த படத்தை 2வது பாகம் எடுக்க விரும்புகிறீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, நான் எடுத்த படங்களிலேயே 2ம் -பாகம் எடுப்பதற்கான சிறந்த படம் துப்பாக்கி தான். அப்படத்தில் லீவு முடிந்து விஜய் திரும்ப பணிக்கு செல்வார். அதை இரண்டாம் பாகம் எடுக்கும் ஐடியாவில் தான் உருவாக்கினேன்.

திரும்பி லீவுக்கு ஊருக்கு வரும்போது நடக்கும் சம்பவங்களை வைத்து இரண்டாம் பாகம் கதையை உருவாக்கலாம் என்ற யோசனையில் இப்படி ஒரு கிளைமாக்ஸ் காட்சியை வைத்திருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.