2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மலையகத்தில் ரயில் தடம்புரள்வு

உள்ளூர்September 5, 2025 · 12 months முன்2
மலையகத்தில் ரயில் தடம்புரள்வு

மலையக ரயில் பாதையை பழுதுபார்ப்பதற்காக ரயில் தண்டவாளங்களை ஏற்றிச் சென்ற கிரேன் கொண்ட ரயில் தண்டவாளத்தில் தடம்புரண்டுள்ளது.

இதனால் மலையக ரயில் சேவை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஹட்டன் மற்றும் ரொசெல்ல ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று காலை உலபனையிலிருந்து கொட்டகலைக்கு ரயில் தண்டவாளங்களை ஏற்றிச் செல்லும் தண்டவாள ரயில் இயந்திரமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

தண்டவாள ரயில் குழுவினர் குறித்த ரயில் இயந்திரத்தை சீர் செய்யும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

தடம் புரண்ட தண்டவாள ரயில் இயந்திரம் சீர் செய்யும் வரை, பதுளையிலிருந்து கொழும்புக்கு செல்லும் ரயில்கள் ஹட்டன் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்படும் என்றும், கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்லும் ரயில்கள் ரொசெல்லவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் என்றும் ஹட்டன் ரயில் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.