காணி பிரச்சினைகளைத் தீர்க்கும் ஐக்கிய நாடுகள் சபை.

ஐக்கிய நாடுகள் சபை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில், நீண்டகாலமாக நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசுக்கு உதவவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதற்காக ஒரு புதிய திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கவுள்ளது.
நாட்டில் போர் முடிவடைந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏராளமான உரிமைகோரல்கள் தீர்க்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே ஃபிராஞ்ச் விவசாய அமைச்சின் கீழ் உள்ள அரச நிறுவனங்களுடன் தாம் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.