2026 October 23, Friday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

உள்ளூர்November 25, 2025 · 11 months முன்6
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நவம்பர் மாதம் 23ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 20 இலட்சத்து 54 ஆயிரத்து 980 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 463,474 ஆகும்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 187,282 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 153,336 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 119,179 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 128,774 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 100,076 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 92,180 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இவ்வாண்டின் நவம்பர் மாதத்தின் முதல் 23 நாட்களில் 164,293 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.