2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

யாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கு புதிய உறுப்பினர்

உள்ளூர்November 25, 2025 · 9 months முன்1
யாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கு புதிய உறுப்பினர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளரான குமாரசாமி சத்தியகுமார் என்பவரே உடன் அமுலாகும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் நியமிக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களில் ஒருவர் தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களில் பங்கேற்காமை காரணமாக அவரது உறுப்பினர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

அந்த உறுப்பினரின் எஞ்சிய காலப்பகுதிக்காக 2028ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்துக்காக மூன்று பேரைத் தெரிவு செய்து, ஜனாதிபதிக்குப் பரிந்துரைப்பதற்கான தெரிவுக் கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பேரவையில் வெற்றிடமாக இருந்த இடத்தை நிரப்புவதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.