2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

ரஜினி – கமல் படத்திலிருந்து சுந்தர் சி விலகியதாக வெளியான தகவல்

பல்சுவைNovember 13, 2025 · 9 months முன்0
ரஜினி – கமல் படத்திலிருந்து சுந்தர் சி விலகியதாக வெளியான தகவல்

தமிழ் சினிமாவின் பெருமை ரஜினிகாந்த், கமல் ஹாசன். இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என எதிர்பார்த்த நிலையில், ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நடிக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது.

அதுவும் இயக்குநர் சுந்தர் சி இப்படத்தை இயக்கப்போகிறார் என அறிவிப்பு வீடியோவை வெளியிட்டனர். இது கமல் – ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. ஆனால், தற்போது மிகப்பெரிய அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

ரஜினி – கமல் இணையும் இப்படத்தை தான் இயக்கவில்லை, படத்திலிருந்து வெளியேறுகிறேன் என்று சுந்தர் சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது இரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறிவிப்பு வெளிவந்து சில நாட்களே ஆகும் நிலையில், படத்திலிருந்து விலகுவதாக சுந்தர் சி வெளியிட்டுள்ள அறிக்கையை வெளியிட்டுள்ளார். சுந்தர் சி-க்கு பதிலாக வேறு யார் ரஜினியின் 173வது படத்தை இயக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.