2026 October 23, Friday ⛅ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளருக்கு பிணை கோரிக்கை நிராகரிப்பு!

உள்ளூர்November 13, 2025 · 11 months முன்3
குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளருக்கு பிணை கோரிக்கை நிராகரிப்பு!

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வெளிநாடு சென்று மீண்டும் நாட்டுக்கு வரவிருந்த ஒருவரின் காணிக்கு உறுதிப்பத்திரம் தயாரித்துக் கொடுப்பதற்காக ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் அனியா பிள்ளை முபாரக்கின் பிணைக் கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்தது.

இதன்படி, குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதலகம உத்தரவிட்டுள்ளார்.

எனினும், சந்தேகநபரான தவிசாளரின் சாரதியான முஹம்மது முஸ்தபா என்பவரைத் தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதோடு, அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்துள்ளார்.