2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 28° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ☀️ மட்டக்களப்பு 31°
LIVE
20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

அரசன் படத்திற்காக அனிரூத் வாங்கியுள்ள சம்பளம்… எவ்வளவு தெரியுமா?

பல்சுவைNovember 14, 2025 · 9 months முன்0
அரசன் படத்திற்காக அனிரூத் வாங்கியுள்ள சம்பளம்… எவ்வளவு தெரியுமா?

விடுதலை 2 படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் அரசன். கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்து படு வைரலானது.

இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அறிவிப்பு வீடியோவில் அனிரூத் இசை செம மாஸாக இருந்தது என இரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

அதேபோல், முதல் முறையாக அனிரூத்துடன் வெற்றிமாறன் இணையும் படமும் இதுவே ஆகும். இசையமைப்பாளர் அனிரூத் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அரசன் படத்திற்காக இவருக்கு சம்பளம் தரவில்லையாம். அதற்கு பதிலாக அரசன் படத்தின் ஆடியோ உரிமையை கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆடியோ உரிமை தற்போது ரூ. 13 கோடி வரை மதிப்பு என்றும் படம் வெளிவரும்போது இது இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.