2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!

வெளிநாட்டு பெண்ணிடம் பணத்தைத் திருடிய ஹொட்டல் ஊழியர் கைது

உள்ளூர்November 14, 2025 · 9 months முன்1

கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒரு உயர்ரக ஹொட்டல் அறையில் தங்கியிருந்த நெதர்லாந்தை சேர்ந்த பெண்ணின் பணப்பையிலிருந்து பணத்தைத் திருடியதற்காக ஹொட்டல் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வெளிநாட்டுப் பெண், ஹோட்டலில் உள்ள சிறப்பு விருந்தினர் அறையில் மற்றொரு பெண்ணுடன் தங்கியிருந்தபோது, ​​அவரது பணப்பையில் இருந்த திர்ஹாம்கள் மற்றும் யூரோக்கள் (உள்ளூர் நாணயத்தில் ரூ. 330,000 ரூபாய் ) காணாமல் போனதாக சுற்றுலாப் பொலிஸாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய கோட்டை காவல் நிலையம், அந்தப் பெண் தங்கியிருந்த ஹொட்டலில் ஒரு ஹோட்டல் ஊழியரைக் கைது செய்துள்ளது.

சந்தேக நபர் கந்தானையைச் சேர்ந்த 41 வயதுடையவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (14) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.