2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

போதைப்பொருட்களின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு ஒன்றினைவோம்.

உள்ளூர்October 24, 2025 · 10 months முன்0

நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அவசர வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றினைய வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளை ஒழிப்பதற்கான “தேசிய ஒன்றிணைந்த பணி” குறித்து ஊடக நிறுவனத் தலைவர்களுக்கு விளக்கமளிக்க ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

  • ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதங்களை எழுப்ப முடியும் என்றாலும், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவது குறித்து விவாதத்திற்கு இனி இடமில்லை என்று ஜனாதிபதி கூறினார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றக் கும்பல்களின் நிதி பலம், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு, அரசு இயந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கூட அழிப்பதன் மூலம் நாட்டையும் சமூகத்தையும் அழித்து வருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இந்த அச்சுறுத்தலைத் தொடர அனுமதிக்கக் கூடாது என்று தற்போதைய அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தேசம் ஒன்றிணைவதற்கான தேசிய மிஷனின் தொடக்க விழா அக்டோபர் 30 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு கொழும்பில் உள்ள சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.