2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

யாழில் ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்குமாறு கோரி போராட்டம்

உள்ளூர்September 8, 2025 · 11 months முன்0

பட்டதாரி நியமனத்தில் உள்ளீர்க்கப்பட்டு பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களை ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

நாடு முழுவதிலுமுள்ள 18 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரிகளே இவ்வாறு மாவட்டம் தோறும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைப் பட்டம் பெற்று தொழில் வாய்ப்புக்களுக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிலையில் நாடுமுழுவதும் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த அவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டனர்.

அதன்காரணமாக இருவேறு நிலைகளில் தமது பதவியும் சேவையும் இருப்பதால் பல்வேறு இடர்பாடுகளை நாம் நாளாந்தம் எதிகொள்வதால் மனதளவிலும் பல்வேறு துயரங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

எனவே எமது கோரிக்கைக்கு தீர்வை கோரி நாம் இன்று வடக்கின் ஆளுனரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம். முன்பதாக யாழ் மாவட்டசெயலகம் முன்பாக ஒன்றுகூடிய குறித்த ஆசிரியர்கள் வடக்கின் ஆளுனர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

ஆளுனர் சந்திப்புக்காக ஆசிரியர் சார்பில் மூவர் அழைக்கப்பட்டு கலந்துரையாட்ப்பட்ட நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் தான் அவதானம் செலுத்துவதாக் தெரிவித்திருந்தமை குறிடத்தக்கது.