2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

அரசியல் முன்னோக்கி ஆயிரம் கூட்டங்கள் – ரணிலின் திட்டம்.

உள்ளூர்September 24, 2025 · 11 months முன்1

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உடல்நலக் காரணங்களாலும், எதிர்கால அரசியல் திட்டங்களாலும் வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரான்ஸ், இங்கிலாந்து அல்லது இந்தியா ஆகிய நாடுகள் அவர் செல்லக்கூடிய இலக்குகளாக கருதப்படுகின்றன.

எதிர்க்கட்சி கட்சிகளிடமிருந்து அவருக்கு அரசியல் பொறுப்பு ஏற்க அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரம் அரசியல் கூட்டங்களை நடத்தும் திட்டம் குறித்தும் அவர் ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், அவரது உடல்நிலை தற்போது முதன்மையான காரணமாகக் காணப்படுகின்றது. உறுதியான பயணத் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.