2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 29°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை – ஜனாதிபதி சந்திப்பு.

உள்ளூர்August 21, 2025 · 1 year முன்2
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை – ஜனாதிபதி சந்திப்பு.

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினனர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளனர்.

நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இவ் சந்திப்பானது இடம்பெற்றுள்ளது.

வருடத்திற்கு மூன்று முறை நடைபெறும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் குறித்து கர்தினால் ஆண்டகை, ஜனாதிபதிக்கு விளக்கினார்.

கத்தோலிக்க சபையில் எழுப்பப்பட்ட கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரல்ட் அந்தோணி பெரேரா மற்றும் பேரவையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.