2026 October 18, Sunday 🌧️ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

உள்ளூர்June 21, 2026 · 4 months முன்2
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

பலத்த காற்று வீசும் பகுதிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

கடலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு: ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும், முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறும் என்பதால் மீனவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.”