2026 September 17, Thursday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் அனுமதிப்பத்திர சர்ச்சை!யோஷித ராஜபக்ச–வசந்த கரன்னகோடா வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில்குடியேற்ற அழுத்தம் அதிகரிப்பு – மாணவர் விசாவில் கடுமை!IPL ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது!பயணிகள் அசௌகரியம் – கோரிக்கைகளில் உடனடி கவனம் கோரிக்கை!காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரிக்கு பலத்த மழை சாத்தியம்!2 மில்லியன் டொலர் விசாரணையில் நாமல் மீது நீதிமன்ற உத்தரவு!தமிழரசுக் கட்சி முடிவுக்கு எதிராக அரியநேந்திரன் தரப்பு சட்டப் போராட்டம்!

யோஷித ராஜபக்ச–வசந்த கரன்னகோடா வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில்

உள்ளூர்September 17, 2026 · 29 minutes முன்8
யோஷித ராஜபக்ச–வசந்த கரன்னகோடா வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது. 

இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். 

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிமன்றம், இவ்வழக்கு விசாரணையை வழக்குக்கு முந்தைய விசாரணை மாநாட்டிற்காக அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 

தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாத போதிலும், பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவின் அரச கடற்படை பயிற்சி கல்லூரிக்கு பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றம் புரிந்துள்ளதாகக் கூறி இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.