2026 September 17, Thursday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
IPL ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது!பயணிகள் அசௌகரியம் – கோரிக்கைகளில் உடனடி கவனம் கோரிக்கை!காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரிக்கு பலத்த மழை சாத்தியம்!2 மில்லியன் டொலர் விசாரணையில் நாமல் மீது நீதிமன்ற உத்தரவு!தமிழரசுக் கட்சி முடிவுக்கு எதிராக அரியநேந்திரன் தரப்பு சட்டப் போராட்டம்!மழை தொடர்ந்தால் நிலச்சரிவு அபாயம் மேலும் அதிகரிக்கும்!சட்டவிரோத வாகன வைத்திருப்பு குற்றச்சாட்டு – வழக்கு நீதிமன்றத்தில்!சிங்கப்பூர் பயணத்திற்கு முன் FCID கடிதம் கையளிப்பு – குடும்பம் கூறும் பதில்!

காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரிக்கு பலத்த மழை சாத்தியம்!

உள்ளூர்September 17, 2026 · 2 hours முன்1
காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரிக்கு பலத்த மழை சாத்தியம்!

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் அறிவுறுத்தியுள்ளது.