2026 September 16, Wednesday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
2 மில்லியன் டொலர் விசாரணையில் நாமல் மீது நீதிமன்ற உத்தரவு!தமிழரசுக் கட்சி முடிவுக்கு எதிராக அரியநேந்திரன் தரப்பு சட்டப் போராட்டம்!மழை தொடர்ந்தால் நிலச்சரிவு அபாயம் மேலும் அதிகரிக்கும்!சட்டவிரோத வாகன வைத்திருப்பு குற்றச்சாட்டு – வழக்கு நீதிமன்றத்தில்!சிங்கப்பூர் பயணத்திற்கு முன் FCID கடிதம் கையளிப்பு – குடும்பம் கூறும் பதில்!FCID ஆஜருக்கு இன்னும் சில நாட்கள் – சிங்கப்பூர் சென்றார் ஷிரந்தி!மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களுக்கு மழை எச்சரிக்கை!ஊழலுக்கு கட்சிப் பேதமின்றி நடவடிக்கை – ஹரிணி!

தமிழரசுக் கட்சி முடிவுக்கு எதிராக அரியநேந்திரன் தரப்பு சட்டப் போராட்டம்!

உள்ளூர்September 16, 2026 · 2 hours முன்6
தமிழரசுக் கட்சி முடிவுக்கு எதிராக அரியநேந்திரன் தரப்பு சட்டப் போராட்டம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக, தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 5 தரப்பினருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (16) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியின் விதிகளை மீறி நீக்கியமைக்கு எதிராக, தற்போதைய கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் குணநாயகம் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியோருக்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத் ஊடாக இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வழக்கினை மாவட்ட நீதிபதி இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, வழக்கை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துத் திகதியிட்டுள்ளார்.