2026 October 17, Saturday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° 🌫️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70,000-ஐ நெருங்கியது!

உள்ளூர்July 14, 2026 · 3 months முன்7
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70,000-ஐ நெருங்கியது!

நாட்டின் தற்போதைய டெங்கு நிலைமை குறித்து தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு கவலை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, நடப்பு ஆண்டில் நேற்று (13) வரை பதிவாகிய மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69,951 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் நாடு முழுவதும் 1,279 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் அதிகளவான பாதிப்பு மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளது. அந்த மாகாணத்தில் இதுவரை 33,127 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாகப் பார்க்கையில், கம்பஹா மாவட்டத்தில் 14,464 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 14,004 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். மேலும், நடப்பு ஜூலை மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் 14,572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் ஜூன் மாதத்திலேயே ஆகக்கூடுதலாக 21,538 நோயாளர்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.