2026 September 17, Thursday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
ரூ.34 பில்லியனுக்கும் அதிக முதலீடு – அநுராதபுர வைத்தியசாலை மேம்பாடு!இலங்கை துடுப்பாட்டத்தின் புதிய நம்பிக்கை – சொனால் தினுஷ!தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் அனுமதிப்பத்திர சர்ச்சை!யோஷித ராஜபக்ச–வசந்த கரன்னகோடா வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில்குடியேற்ற அழுத்தம் அதிகரிப்பு – மாணவர் விசாவில் கடுமை!IPL ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது!பயணிகள் அசௌகரியம் – கோரிக்கைகளில் உடனடி கவனம் கோரிக்கை!காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரிக்கு பலத்த மழை சாத்தியம்!

இலங்கை துடுப்பாட்டத்தின் புதிய நம்பிக்கை – சொனால் தினுஷ!

விளையாட்டுSeptember 17, 2026 · 2 hours முன்1
இலங்கை துடுப்பாட்டத்தின் புதிய நம்பிக்கை – சொனால் தினுஷ!

கடந்த ஒகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சொனால் தினுஷ சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

அண்மையில் இடம்பெற்ற உலக டெஸ்ட் சேம்பியன்ஸிப் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறந்த துடுப்பாட்டத்தை அவர் வௌிப்படுத்தியிருந்தார். 

இதனடிப்படையிலேயே அவர் ஒகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஓலி ரொபின்சன் மற்றும் பங்களாதேஷின் ஹசன் மஹ்மூத் ஆகியோர் ஒகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையில் இடம்பெற்றிருந்தனர். 

இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் இவ்விருதைப் தினுஷ பெற்றுள்ளார். 

இந்தியாவிற்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று சதங்களை விளாசினார். 

இதில் இரண்டாவது போட்டியில் அவர் பெற்ற இரட்டைச் சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.