2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

தற்போதைய காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்

உள்ளூர்March 27, 2026 · 5 months முன்0

தற்போதைய காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் எனவும், மே மாதம் இறுதி வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின்னர் இந்த நிலை தவிர்க்கப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான தெரிவித்துள்ளார்.

மேலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், காற்றின் வேகம் மிகக் குறைவாகக் காணப்படுவதுடன், காற்று குறிப்பிட்ட திசையின்றி வீசுவதனால் வளிமண்டலத்தில் வெப்பம் அதிகமாக உணரப்படுவதாக தெரிவித்தார்.

சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுப்பதாலும், மேகமூட்டம் குறைவாக இருப்பதாலும் நேரடி சூரியக் கதிர்வீச்சு தரை மற்றும் கடற்பரப்பை வழக்கத்தை விடவும் அதிகமாக வெப்பமடையச் செய்கின்றது.

குறிப்பாக, காற்றிலுள்ள அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக, உடலில் ஏற்படும் வியர்வை எளிதில் ஆவியாகாமல் தங்கிவிடுகிறது, இது மனித உடலுக்கு அதிக வெப்பத்தை உணரச் செய்கிறது என அவர் தெரிவித்தார்.